Google
www www.tnuifsl.com
 
 
 
 

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டம் (TURIP) என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி (TURIF) என்ற நிதியை ஒரு காலவதியாகாத நிதியாக உருவாக்கியுள்ளது. இந்த நிதி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனத்தால் நிருவகிக்கப்பட்டு வருகிறது.

நோக்கங்கள்

இந்நிதியானது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், சாலைகள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பை மேம்படுத்த / புதுப்பிக்க / மீண்டும் அமைக்க வழங்கப் படும்.

நிதி ஆதாரம்

இந்நிதிக்கான நிதி ஆதாரம், முத்திரை வரியின் மீதான கூடுதல் கட்டணத்தில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதி , உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வின் ஒரு பகுதி, பத்திரங்கள் மற்றும் பிற வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் சந்தைக் கடன்கள், அரசாங்கத்திடமிருந்து பிற கடன்கள், மானியங்கள் மற்றும் அரசாங்கத்தால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் பிற ஆதாரங்கள் ஆகிய பல்வேறு ஆதரங்களில் இருந்து வருகிறது.

2022-23 வரையிலான செயல்திறன்

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதிக்கு, 2022-23 நிதியாண்டில், ரூ.648.81 கோடி் (முந்தைய ஆண்டு ரூ.304.83 கோடி்) அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.714.37 கோடி் (முந்தைய ஆண்டு ரூ.360.11 கோடி்) உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.