Google
www www.tnuifsl.com
 
 
 
 

தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்

தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL), தனியார் துறை பங்களிப்புடன், ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக 1996-ஆம் ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank), வீட்டுவசதி மேம்பாட்டு நிதி நிறுவனம்(HDFC) மற்றும் ஐ.எல்&எப்.எஸ் நிதி சேவைகள் நிறுவனம் (IL&FS) ஆகிய நிறுவனங்கள் இதன் மற்ற பங்குதாரர்கள் ஆகும். இதன் அனுமதிக்கப்பட்ட பங்குத் தொகை ரூ.2.00 கோடி. இதில் செலுத்தப்பட்ட பங்குத் தொகை ரூ.1.00 கோடி ஆகும்

தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமானது (TNUIFSL), தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி நிதியம் (TNUDF), குடிநீர் & சுகாதார கூட்டு நிதியம் (WSPF) மற்றும் இதர அரசு மானிய நிதிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம், நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான, ஆரம்பம் முதல் திட்டச் செயலாக்கம் வரையிலான அனைத்திற்குமான முழு தீர்வையும் அளித்து வருகிறது. இதன் பிரதான பணிகளில், திட்ட மேம்பாடு, திட்ட மதிப்பீடு, திட்ட வடிவமைப்பு, மூலதன திரட்டு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை அடங்கும். தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ஆதாயம் ஈட்டி வருவதோடு ஆதாயப் பங்குத் தொகையையும் இந்நிறுவனம் தொடர்ந்து செலுத்தி வருகிறது.

நிருவாக குழு

இந்நிறுவனம் கீழ்கண்ட இயக்குநர்கள் குழுவால் நிருவகிக்கப்படுகிறது

1

Dr. S. விஜயகுமார், இ. ஆ. ப.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்

 

   

2

Dr. D. கார்த்திகேயன், இ. ஆ. ப.
அரசு முதன்மைச் செயலாளர்,
நகராட்சி நிருவாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை

 

   

3

திரு. ரிஷப், இ. ஆ. ப.
அரசு துணைச் செயலாளர்,
நிதித்துறை

 

   

4

திரு. K. விவேகானந்தன், இ. ஆ. ப.
நிர்வாக இயக்குநர்,
TUFIDCO

 

   

5

திருமதி. காகர்லா உஷா, இ. ஆ. ப.
அரசு முதன்மைச் செயலாளர்,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

 

   

6

திரு.S. சிவராசு, இ. ஆ. ப.
நகராட்சி நிருவாக இயக்குனர்

 

   

7

திருமதி. ஆர்த்தி கண்ணன்,
மண்டலத் தலைவர்,
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்

 

   

8

திரு.மடிபட்லா ஹிமாதர்,
மாநில வணிகத் தலைவர்,
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்

 

   

9

திரு. மேத்யூ ஜோசப்,
நிர்வாக மேலாண்மை உறுப்பினர்,
எச்.டி.எஃப்.சி லிமிடெட் ,

 

   

10

திரு. ஜெயஸ்ரீ ராமஸ்வாமி,
நியமன இயக்குனர்,
ஐ.எல்&எப்.எஸ் லிமிடெட்

 

நிருவகிக்கப்படும் நிதிகள்

பிற சேவைகள்

  • திட்டத் தயாரிப்பு மற்றும் மேம்பாடு (சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை, நகர மேம்பாட்டுத் திட்டம், போக்குவரத்துத் திட்டம் முதலியவற்றைத் தயாரித்தல் உட்பட)
  • திட்டம் மற்றும் நிதி கட்டமைப்பு, மதிப்பீடுகள் மற்றும் திட்ட மேலாண்மை
  • கொள்முதல் மற்றும் ஒப்பந்த மேலாண்மை (பணிகள் மற்றும் ஆலோசனைக்காக)
  • கடன் மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை
  • கருவூல மேலாண்மை
  • நிதி மற்றும் முதலீட்டு ஆலோசனை சேவைகள்
  • திட்டம் மற்றும் கொள்கை ஆலோசனை சேவைகள்
  • வளங்களைத் திரட்டும் சேவைகள்
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மூலதன சந்தை அணுகல்
  • பரிவர்த்தனை ஆலோசனை சேவைகள் (PPP கள் உட்பட)
  • மேலாண்மை மற்றும் பிற ஆலோசனை சேவைகள்

ஒவ்வொரு சேவையும் வாடிக்கையாளரின் தேவை மற்றும் தேவையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும்.