Google
www www.tnuifsl.com
 
 
 
 

திட்ட வளர்ச்சி மானிய நிதி

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான அல்லது நிர்வகிக்கப்படும் பிற நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் / ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, திட்ட வளர்ச்சி மானிய நிதியை (PDGF) ஒரு காலவதியாகாத நிதியாக உருவாக்கியுள்ளது. இந்த நிதி ஏப்ரல் 2015 - ல் இருந்து செயல் படுகிறது. இந்த நிதி தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனத்தால் நிருவகிக்கப் படுகிறது.

நோக்கங்கள்

திட்ட வளர்ச்சி மானிய நிதியானது, நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், நகர்ப்புற வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குதல், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அத்தகைய மக்களுக்கு நகர்ப்புற சேவைகளை வழங்குவதில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஆலோசனைப் பணிகளை மேற்கொள்ள உதவும் தொழில்நுட்ப உதவி மானியமாகும். இந்நிதியானது, ஆலோசனை பணிகளை மேற்கொள்ளவும், வளங்களை திரட்டும் திட்டங்களை செயல்படுத்தவும் மற்றும் நிருவகிக்கவும் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை வழங்கவும் பயன்படுத்தப்படும்.

நிதி ஆதாரம்

  • செயல்பாட்டில் உள்ள கடன் வரிசைகளின் அடிப்படையில், உலக வங்கி, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) போன்ற அந்நிய நிதி நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல்படுத்தப் படும் வெளி ஆதரத் திட்டங்களுக்கு வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் செய்யப்படும் ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் மூலதன பங்கின் மீதான வட்டியில் தமிழ்நாடு அரசாங்கத்தின் பங்கு.
  • TNUDP III திட்டத்தின் கீழ் Grant Fund-II, SMIF-TN மற்றும் SMIF-TN-II-2 திட்டங்களின் கீழ் KfW கிராண்ட் ஃபண்ட் -II, TNUIP திட்டத்தின் கீழ் JBIC கிராண்ட் ஃபண்ட்-II மற்றும் திட்டத் தயாரிப்பு மானிய நிதி ஆகிய நிதிகளிடமிருந்து மாற்றபபட்ட நிதி.
  • டெபாசிட்கள் மற்றும் முதலீடுகள் மூலம் வரும் வட்டி மற்றும் இதர வருமானங்கள்.
  • அவ்வப்போது அரசாங்கத்தால் உத்தரவிடப்படும் பிற ஆதாரங்கள் மற்றும் வழிமுறைகள் .

2022-23 இல் செயல்திறன்

2022-23 நிதியாண்டில் அரசிடம் இருந்து ரூ.122.63 கோடி (முந்தைய ஆண்டு ரூ.47.50 கோடி) பெறப்பட்டுள்ளது மற்றும் 2022-23 நிதியாண்டில் பல்வேறு ஆலோசனைப் பணிகளுக்கு ரூ.54.91 (முந்தைய ஆண்டு ரூ.41.72 கோடி) கோடி வழங்கப்பட்டுள்ளது.