Google
www www.tnuifsl.com
 
 
 
 

திட்ட நிலைத்தன்மை மானிய நிதி

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான மானியத்தை வழங்குவதற்காக, திட்ட நிலைத்தன்மை மானிய நிதியை (PSGF) ஒரு காலவதியாகாத நிதியாக உருவாக்கியுள்ளது. இந்த நிதி ஏப்ரல் 2015 - ல் இருந்து செயல் படுகிறது. இந்த நிதி தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனத்தால் நிருவகிக்கப் படுகிறது.

நோக்கங்கள்

  • நகர்ப்புறக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மூலதன மானியம் வழங்குதல்.
  • நகர்ப்புற மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களின் நிதி, நிலைத்தன்மையை அடைவதற்கான நோக்கத்துடன் சாத்தியக்கூறு இடைவெளி நிதியை வழங்குதல்.
  • பத்திரங்கள், கடன் கருவிகள் மற்றும் பிற கடன்களை வழங்குவதற்கான கடன் மேம்பாட்டு வழிமுறைகளை மேற்கொள்வதற்கான மானியம் வழங்குதல்.

நிதி ஆதாரம்

  • செயல்பாட்டில் உள்ள கடன் வரிசைகளின் அடிப்படையில், உலக வங்கி, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) போன்ற அந்நிய நிதி நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல்படுத்தப் படும் வெளி ஆதாரத் திட்டங்களுக்கு வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் செய்யப்படும் ஒதுக்கீடு.
  • TNUDP III திட்டத்தின் கீழ் மானிய நிதி-I, SMIF-TN, SMIF-TN-II-1 மற்றும் SMIF-TN-II-2 திட்டங்களின் கீழ் KfW மானிய நிதி -I மற்றும் TNUIP திட்டத்தின் கீழ் JBIC மானிய நிதி-I ஆகிய நிதிகளிடமிருந்து மாற்றப்பட்ட நிதி.
  • டெபாசிட்கள் மற்றும் முதலீடுகள் மூலம் வரும் வட்டி மற்றும் இதர வருமானங்கள்.
  • அவ்வப்போது அரசாங்கத்தால் உத்தரவிடப்படும் பிற ஆதாரங்கள் மற்றும் வழிமுறைகள் .

2022-23 இல் செயல்திறன்

2022-23 நிதியாண்டில் அரசிடமிருந்து ரூ.104.45 கோடி (முந்தைய ஆண்டு ரூ.969.54 கோடி) பெறப்பட்டுள்ளது, மேலும் 2022-23 நிதியாண்டில் பல்வேறு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.542.28 கோடி (முந்தைய ஆண்டு ரூ.364.31 கோடி) வழங்கப்பட்டுள்ளது.