|
சென்னை பெரு நகர வளர்ச்சி நிதி
தமிழ்நாடு அரசு, சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சென்னை பெரு நகர வளர்ச்சி நிதி என்ற நிதியை தொடங்கி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தை , இத்திட்டத்தின் மைய முகவராகவும், இந்நிதியின் நிதி மேலாளராகவும் நியமித்துள்ளது.
நோக்கங்கள்
இந்நிதியானது, சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால், விளக்குகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு(CMWSSB) வழங்கப் படும்.
நிதி ஆதாரம்
இதற்கான நிதி, ஒவ்வொரு நிதி ஆண்டும் தமிழ்நாடு அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
செயல்திறன்
மொத்தத்தில், ரூ.3774.79 கோடிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3675.60 கோடிகள் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்(CMWSSB) மற்றும் இதர செலவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
|